There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

SMS

Jun 15, 2011



ஊருக்கு வந்து, மறுபடியும் என் தம்பியின் மொபைலில் இருந்து ‘சுட்ட’ குறுந்தகவல்கள் உங்களுக்காக!
பிடிச்சத ரசிங்க! பிடிக்கலைனா விடுங்க!
என் கிட்ட சண்டைக்கு வராதீங்க.. இதில் உள்ள Contents-க்கு எல்லாம் கம்பனி பொறுப்பேற்காது!

12th பெயில் ஆனா வேட்டைக்காரன் அனுஷ்கா மாதிரி ஃபிகர் மாட்டும்;
10th பெயில் ஆனா படிக்காதவன் தமன்னா மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும்;
அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும்;
நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமை தான்!
சோ, சுமாரா படிங்க.. சூப்பர் ஃபிகரா புடிங்க :-)

கல்யாண விருந்து தான், ஆனாலும் கை நனைக்க முடியவில்லை! கண்கள் நனைந்தன.. காரணம் “சோறு முடிஞ்சு போச்சு மச்சி”

காதல் ஒரு வினோதமான எக்ஸாம்...! அதில் எப்போதும்
பெண்களுக்கு “பாஸ் மார்க்”
ஆண்களுக்கு “டாஸ்மாக்”
சோ, பீ கேர்ஃபுல்.

வீட்டில் இருந்து வைன்ஷாப்பிற்குப் போக வைப்பது ‘காதல்’
வைன்ஷாப்பில் இருந்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவது ‘நட்பு’.

அப்பா: ரேன்க் கார்ட் எங்கடா?
பையன்: இந்தாங்கப்பா..
அப்பா: அடப்பாவி! 5 பாடத்துலயும் பெயிலா? இனிமேல் என்னை ‘அப்பா’ன்னு கூப்பிடாத!
பையன்: சரிடா மாப்ள.. Scene-a போடாம Sign-a போடு!

மிருகங்களைப் பார்க்க மனிதர்கள் வந்து செல்லும் இடம் – ZOO
மனிதர்களைப் பார்க்க மிருகங்கள் வந்து செல்லும் இடம் – முதியோர் இல்லம்!

டீச்சர்: இந்தியாவுக்கு ப்ரிடிஷ் சுதந்திரம் கொடுக்கலைனா என்ன ஆகியிருக்கும்?
மாணவன்: ஆர்யாவுக்கு கரெக்ட் ஆன மாதிரி எல்லாருக்கும் சூப்பர் ஃபிகர் ஒன்னு பிக்-அப் ஆகியிருக்கும்!

1 : ஹலோ.. சூரியன் எப்.எம்?
2 : ஆமா.. சொல்லுங்க?
1 : 15 ஆயிரம் ரூபா, ஒரு க்ரெடிட் கார்ட், அப்றம் மிஸ்.ஷாலினி, நம்பர்.56, இந்திராநகர், சேலம்ன்னு பேரு அட்ரஸ் வெச்ச ஐ.டி.கார்டு உள்ள பர்ஸ் ஒன்னு கிடைச்சிருக்கு.
2 : எவ்வளவு நேர்மை உங்களுக்கு! அவங்க கிட்ட இந்தப் பர்ஸ கொடுக்கனுமா?
1 : நோ.. நோ.. அவங்களுக்கு ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.. “நன்றி சொல்ல உனக்கு...வார்த்தை இல்லை எனக்கு...”

ஒரு குட்டிக் காதல் கதை:
ஒரு பையன் ஒரு பொண்ண ரொம்ப டீப்பா லவ் பண்ணான். ஒரு நாள் அந்தப் பொண்ணுகிட்ட போய் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்; நாம கல்யாணம் பண்ணிக்கலாமா’ன்னு ப்ரப்போஸ் பண்ணிட்டான். ஆனா, அந்தப் பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு அவன்கிட்ட வாங்கின ஒரு புத்தகத்துல “நான் சும்மா சொன்னேன்.. ஐ லவ் யூ டூ”ன்னு எழுதி அவன்கிட்ட திருப்பிக் கொடுத்துட்டா. ஆனா 4 வருஷம் ஆகியும் அந்தப் பையன் அவகிட்ட வந்து பேசவே இல்லை. இந்தப் பொண்ணுக்கு ஒரே குழப்பம். அப்புறம் நேரடியாவே ஒரு நாள் அவன்கிட்ட போய் கேட்டுட்டா!
நீதி: வருஷத்துக்கு ஒரு தடவையாவது புக்’க திறந்து பாருங்க :-)

ப்ரின்சிபல்: பாய்ஸ் யாராவது கேர்ள்ஸ் ஹாஸ்டல் உள்ள போனா ஃபைன்:
முதல் தடவை : ரூ.100/-
இரண்டாவது தடவை : ரூ.200/-
மூன்றாவது தடவை : ரூ.500/-
பையன்: மன்த்லி ஃபீஸ் எவ்வளவு சார்..???

புதுவிதமான சாலை சிக்னல் போர்டு:
“விபத்துப் பகுதி; வேகமாகச் செல்லவும்.. மகளிர் கல்லூரி”

உனக்கும் ஒரு காலம் வரும்... அப்போ ஒரு பொண்ணு உன்ன ரொம்ப லவ் பண்ணுவா. கட்டிப் பிடிச்சு கிஸ் பண்ணிகிட்டே சொல்லுவா.. “ஐ லவ் யூ டாடி” ! ஓவர் இமேஜினேஷன் உடம்புக்கு ஆகாது! ;-)

அன்று அவளைக் காதலிக்க காலேஜைக் கட் அடித்தேன்;
இன்று அவளை மறக்க பாரி’ல் கட்டிங் அடிக்கிறேன்!

மனைவி: பக்கத்து வீட்டுல பெரிய சண்டை நடக்குது.. நீங்க ஒரு தடவை போய் என்னன்னு பார்க்கக்கூடாதா?
கணவன்: நான் ஒரு தடவை போனதால வந்த சண்டை தான்டி அது!

தந்தை: உனக்கு தம்பி பாப்பா வேணுமா தங்கச்சி பாப்பா வேணுமா?
3 வயது பையன்: எனக்கு உங்க தங்கச்சியோட பாப்பா தான் வேணும்! ;)
(பயபுள்ள.. மூனு வயசுல மொறப்பொண்ண தேடுது)

நல்ல பொண்ணுக்கும் டைனோசருக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?
ரெண்டுமே இப்ப இல்ல.. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே அழிஞ்சு போச்சு! ;)

டீச்சர்: ஏன் வீட்டுப்பாடம் பண்ணல?
மாணவன்: கரெண்ட் இல்ல
டீச்சர்: மெழுகுவர்த்தி ஏத்தி எழுதலாம்ல?
மாணவன்: தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்துச்சு
டீச்சர்: ஏன் அதை எடுக்கல?
மாணவன்: நான் குளிக்கல.. அதான் சாமி ரூம்க்குள்ள போகல
டீச்சர்: ஏன் குளிக்கல?
மாணவன்: மோட்டர் ஓடல.. தண்ணி இல்ல.
டீச்சர்: ஏன் மோட்டர் ஓடல?
மாணவன்: லூசா நீங்க? ஃபர்ஸ்ட்டே சொன்னேன்ல.. கரெண்ட் இல்லன்னு!
டீச்சர்: ?????

நம்பர் 1: என்கிட்ட 12 கார், 14 வீடு, கோடிக்கணக்கான பேங்க் பாலன்ஸ் இருக்கு. உன்கிட்ட என்ன இருக்கு?
நம்பர் 2: எனக்கு ஒரே ஒரு பையன் இருக்கான். அவனோட கேர்ள் ஃப்ரெண்ட், உன் பொண்ணு தான்! ஜின் தா தா ஜிந்தா ஜிந்தா ஜின் தா தா :-)

அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு, அவள் பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை.. காரணம், அவள் பேசியது “இங்கிலிஷ்”... என்னம்மா பேசுறாய்யா!

இந்த சொசைட்டி எப்பவும் நம்மகிட்ட ஒரே ஒரு கொஸ்டீன் தான் கேட்கும்.. அது – “அப்புறம் தம்பீ... நீங்க என்னதான் பண்றீங்க?”
Beware of Mongoose Mandaiyans :-)

ஒரு ஜோக்:
ஒரு குரங்கு ஒரு வீட்டின் வாசலில் வந்து நின்றது.
மனைவி: என்னங்க! உங்க சொந்தக்காரங்க யாரோ வர்றார் பாருங்க!
கணவன்: (வாசலுக்கு ஓடிச்சென்று) அடடே.. வாங்க மாமா! நீங்க மட்டும் வர்றீங்க? அத்தை வரலையா?
மனைவி: ?!!!

My heart is so weak that the doctor said there are only two ways for me to get cured
1. I C U (or)
2. U C Me

Attitude rocks:
I don’t like people driving fast…and that’s the reason I overtake them!

Touching lines:
I stopped thinking about Beauty… when I saw Love between BLIND COUPLE!

When a boy proposes a Village girl, she will normally reply as…
“Come naughty welcome are pinch room”
Don’t understand? Read it fast! ;)

If you cry on seeing the Question paper, it is an insult.. If your teacher cries seeing your Answer paper, it is your Achievement !

Question asked in a Talent test:
If you have married one of the twin sisters, how would you recognize your wife?
The best answer:
Why should I recognize? (Kanna.. Rendaavadhu Laddu thinga aasaiya?) ;)

Funny but true quote:
“Don’t trust your heart… Because it is not on the “right side” !! :)
*
*
Read More...

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-2)

Jun 11, 2011



கட்டுப்பாடுடன் வளர்ந்தவளுக்கு இந்தக் குழந்தைகளைப் பார்க்கையில் ஏற்படும் எரிச்சலுணர்வு ஒருவித பொறாமையினாலோ என்று எண்ணிப்பார்த்தேன். விடை தெரியவில்லை.


காயத்ரியையும் கோபியையும் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இருவரும் சுட்டித்தனத்தின் திருவுருவங்கள். வீட்டில் யாருடைய தொந்தரவுமின்றி தனிமையே கதியாக இருந்து பழகியவளுக்கு இந்தக் குழந்தைகளின் அருகாமை சிறிது தொந்தரவாகத் தான் இருந்தது. இருந்தாலும் இந்தத் தருணங்கள் மீண்டும் கிடைக்கப்பெறாதவை என்பதை அறிந்திருந்தமையால் அவற்றை ரசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியிருந்தேன்.

எனது அறைதான் அவர்களுக்குத் “திறந்திடு சீசேம்” மந்திரம் சொல்லிக்கொண்டு உள்ளே குதித்து ஓடி கொண்டாட்டம் போடும் 'அலிபாபா குகை'. அதில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும். சில பொருட்கள் என்னவென்றே புரியாதவை. ஆனாலும் அவற்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து யாரும் அறியாமல் இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது. இந்த ‘இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது’ எல்லா வஸ்துகளுக்கும் பொருந்தாது. சில சமயங்களில் டிவிக்கு மேலே எனது பேனா இருக்கும்.  ‘இது என்னதாச்சே!’ எனச் சந்தேகத்துடன் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலேயே காயத்ரி வந்துவிடுவாள்.

“அத்தே.. தம்பிதான் பேனா எடுத்தான். நான் எடுக்கவேயில்ல”

“பொய் சொல்லாதடி.. அவனுக்கு பேக் எல்லாம் தொறக்கவே தெரியாது. நீ தான் எடுத்துக் கொடுத்திருப்ப”

‘கண்டுபிடித்துவிட்டாளே!’ என்னும் ரீதியில் திருதிருவென விழித்து ஒரு ரவுடிச் சிரிப்பு சிரிப்பாள். சிரிக்கையில் ஒருபக்கம் மட்டும் குழிவிழும் அந்த வலது கன்னத்தைப் பிடித்து நன்றாகக் கிள்ளிவிட்டுவிட்டுக் கோபமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வேன். அப்படியே எழுந்து எனது அறைக்குள் சென்று கணினியின் முன்பு அமர்ந்துவிட்டுப் பார்த்தால் காயத்ரி சத்தமின்றி எனக்கு முன்பாகவே வந்து பக்கத்தில் நின்று சிரித்துக் கொண்டிருப்பாள். பின்னாலேயே அவனும் வந்து மேஜையின் இந்தப் பக்கமாக நின்று கொள்வான். ‘எப்படா கம்ப்யூட்டரை ஆன் செய்வாள்... சப்பி சீக்ஸ் (chubby cheeks) டான்ஸ் ஆடும் பொம்மையைக் காட்டுவாள்’ எனக் காத்துக் கொண்டிருந்தவள் போல ’அதை வைங்க இதை வைங்க’ என நொய் நொய்யென்று மொய்த்து விடுவாள். சரியென நானும் (வளர்ந்துவிட்டோம் என்னும்) “மெய்”மறந்து அந்தக் கார்ட்டூன் வீடியோவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்!

இப்படியே ஒருவாறு குழந்தைகளின் சுட்டித்தனத்தை ரசிக்கத் தொடங்கியிருந்த வேளை அது. என்னைச் சோதிக்கவென்றே ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்து லேப்டாப்பைக் கட்டிலில் வைத்துக் கொண்டு இட்லிவடை ப்ளாக் படித்துக் கொண்டிருந்தேன். இடையில் அலைபேசியில் 'முக்கிய'மான அழைப்பு ஒன்று வரவே அறைக்குள் சரியாக சிக்னல் கிடக்காது என நினைத்து எல்லாவற்றையும் அப்படியே வைத்துவிட்டு அறைவிளக்கையும் அணைத்துவிட்டு இரண்டு குட்டீஸையும் வெளியே இழுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

சுவாரஸ்யமாகப் பேசி முடித்துவிட்டு அறைக்குள் வந்து பார்த்தால் லேப்டாப் மூடியிருந்தது. திறந்து பார்த்தவளுக்கு அப்படியே அலறவேண்டும் போல் இருந்தது! லேப்டாப்பின் எல்.சி.டி. ஸ்க்ரீன் கல்லெறிபட்டது போல் கருப்பாக உடைந்திருந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது!! கீபோர்டின் மேலே எனது அலைபேசியின் இயர்ஃபோன் இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு ‘ஐடில்’ மோடிற்குச் சென்றிருந்த லேப்டாப்பை ‘என்னடா படத்தைக் காணோம்’ என எண்ணி மூடிவைக்கிறேன் பேர்வழி என்று அப்படியே மூடியிருக்கிறாள். உள்ளே இயர்போன் இருந்ததால் அது சரியாக மூடாமல் போகவே வைத்து அமுக்கியிருக்கிறாள் இந்த அறிவுக் கொழுந்து காயத்ரி!

“அக்கா......!” என அமைதியாக அழைத்துவிட்டு அருகில் குறுகுறு பார்வையுடன் நின்றிருந்த காயத்ரியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

(சேட்டை தொடரும்)

*
Read More...

ஹாய் தோழி!

Jun 8, 2011

என்னடா இவளும் அழகுக் குறிப்புகள் எழுத ஆரம்பிச்சிட்டான்னு நினைக்கிறீங்களா? ஆமாங்க :-)
நிறைய பேர்இயற்கை அழகே அழகு; செயற்கையாக எதுக்கு நாம ஏதாவது செய்யனும்?’ என்றும்நானெல்லாம் பிறந்ததிலிருந்து லைஃப்பாய் சோப்பும் பான்ட்ஸ் பவுடரும் தவிர வேறு எதுவுமே என் முகத்திற்குப் போட்டது இல்லை; ஆனாலும் எனது தோல் இவ்வளவு தூய்மையாக இருக்கிறது’ (என் அம்மா தான்!) என்பது போன்ற வசனங்களும் பேசி நான் கேட்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் இயற்கையாகவே எல்லாம் அமையப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் எல்லாமே பெர்ஃபெக்ட்டாக அமைந்திருப்பது சில பேருக்குத் தான். அப்படி அமையப் பெறாதவர்கள் சில சின்னச் சின்ன முயற்சிகள் பயிற்சிகள் செய்து நம்மை நாமே செம்மைபடுத்திக் கொள்வதில் தவறேயில்லை.
இந்தப் பகுதியில் கூந்தலைப் பராமரிப்பதற்கான சில டிப்ஸ் கொடுக்கிறேன். முயற்சி செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தவறாமல் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்!
பொதுவாக அது இது என்று பலவற்றை முயற்சி செய்து பார்த்துவிட்டு நமக்கு எதுவும் சரிபட்டு வரவில்லையே என்று வருத்தப்படும் தோழிகளை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால் பல வழிமுறைகளைப் பின்பற்றுவதைவிட ஒரே ஒரு வழிமுறையைக் கான்ஸ்டண்டாகத் தொடர்ந்து செய்துவர உங்களுக்கு அதற்கான பலன் கேரண்டீட்!
சிலருக்குக் காய்ச்சிய மூலிகை எண்ணெய் ஒத்துக் கொள்வதில்லை. அலெர்ஜியாகிப் பொடுகுத் தொல்லை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட எண்ணெய்க் குளியலை எடுத்துக் கொண்டு, தினசரி உபயோகத்திற்குத் தூய்மையான தேங்காய் எண்ணேய் பயன்படுத்தினாலே போதுமானது!
  • எண்ணெய்க் குளியலுக்கு:
1. தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
2. நல்லெண்ணெய் (Gingelly Oil)
3. விளக்கெண்ணெய் (Castor Oil)
4. ஆலிவ் எண்ணெய் (Olive Oil)
5. பாதாம் எண்ணெய் (Almond Oil)
இவையனைத்தும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் (கூந்தல் அளவைப் பொறுத்து விகிதம் மாறாமல் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்) எடுத்துக் கொண்டு, மிதமான வானலியில் லேசாகச் சூடுபடுத்திக் கைபொறுக்கும் சூட்டோடு தலையில் தடவ வேண்டும். மயிர்க்கால்களில் நன்றாகப் படுமாறு தேய்க்க வேண்டும். மேலும் அடியிலிருந்து நுனிமுடி வரை நன்றாக எண்ணெயில் ஊறும்படி அப்ளை செய்துவிட்டு ஒரு 15 நிமிடங்கள் நம் கைகளால் ஸ்கால்ப்பில் வட்டவடிவில் (circular motions) மசாஜ் செய்துவிட்டு மேலும் ஒரு 30 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்க வேண்டும்.
சிலருக்குச் சீயக்காய் பிடிக்காது. சீயக்காய் தேய்த்துக் குளித்தால் கூந்தல் வறண்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் ஏதாவது மைல்டான ஷாம்பூ (preferably Dove) எடுத்துக் கொண்டு அதில் நிறைய அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொண்டு கூந்தலை அலசலாம். இப்படிச் செய்தால் கூந்தலுக்கும் நல்லது. Cost Effective – ஆகவும் இருக்கும். ஒரு சாஷேவே அதிகம் போலத் தோன்றும்!
மேலும் கவனிக்க வேண்டியது கூந்தலை அலசியவுடன் அப்ளை செய்யவேண்டிய கண்டிஷனர்! தலையில் ஷாம்பூ போட்டதால் ஏற்பட்ட பி.ஹெச். மாற்றத்தை இது சரிசெய்கிறது. கண்டிஷனர் போடும் போது கவனிக்க வேண்டிய விஷயம், அது முடியில் மட்டுமே படவேண்டும். மண்டையில் படக் கூடாது. பட்டால் பொடுகுத் தொல்லை ஏற்பட்டு முடி உதிர்தல் ஏற்படும். எனவே இதில் கவனமாக இருக்கவும்.
மேற்கண்ட இந்த எண்ணெய்க் குளியலுக்குப் பலன் நிச்சயம்!! வாரமொருமுறை தொடர்ந்து செய்து பயன்பெறுங்கள்.
இவை தவிரவும் கூந்தல் பராமரிப்பிற்கு நிறைய டிப்ஸ் உள்ளன.
2. முட்டையின் வெள்ளைக்கரு அல்லது கற்றாழை அப்ளை செய்து ஊறவைத்துக் குளிக்கலாம். இது நல்ல போஷாக்கு அளிக்கும்.
3. இரவில் வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் காலையில் அதை அரைத்துத் தலையில் அப்ளை செய்து ஊறவைத்துக் குளிக்கலாம். குளிர்ச்சியளிப்பதோடு பொடுகு தொல்லையும் குறையும்.
4. சீயக்காய் விரும்புபவர்கள் மருதாணி, கருவேப்பிலை, கரிசலாங்கன்னி, செம்பருத்தி, வேப்பயிலை, பூலாங்கிழங்கு, எலுமிச்சை/ஆரஞ்சுபழத் தோல்கள், ரோஜா இதழ்கள் மற்றும் சிகைக்காய் ஆகியவற்றை உலர்த்தி நிழலில் காயவைத்துப் பொடி செய்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
  மேலும் கவனிக்க வேண்டியவை:
  • ஈரத்தோடு கூந்தலில் சீப்பை உபயோகிக்க வேண்டாம்.
  • இரவில் படுக்கும் முன்பு சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து சீப்பால் நன்றாக வாரிவிட்டுக் கூந்தலைப் பின்னி ரிப்பன் வைத்து மடித்துக் கட்டிக் கொண்டு படுக்கலாம்.
  • மாதமொருமுறை ஒரு வளர்பிறை நாளில் கூந்தலை லேசாக ட்ரிம் செய்யலாம்.
  • தினமும் உணவில் புரதம் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கீரை, கருவேப்பிலை, பாதாம், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
  • மருத்துவரின் ஆலோசனையுடன் சிறிது காலம் அயர்ன் மாத்திரைகள்/டானிக் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு மிக நல்லது.
மேற்கண்ட டிப்ஸ் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பின்பற்றி வளமான தலைமுடியைப் பெறலாம். விடுபட்ட கருத்துகளைக் கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்களேன் ஃப்ரென்ட்ஸ்!!!
*
Read More...