There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

ஆத்திசூடி

Jan 31, 2013

றம் செய விரும்பு.
றுவது சினம்.
யல்வது கரவேல்.
வது விலக்கேல்.
டையது விளம்பேல்.
க்கமது கைவிடேல்.
ண்ணெழுத்து இகழேல்.
ற்பது இகழ்ச்சி.
யமிட்டு உண்.
ப்புரவு ஒழுகு.
துவது ஒழியேல்.
வியம் பேசேல்.
கம் சுருக்கேல்.

ண்டொன்று சொல்லேல்
ப்போல் வளை.
னி நீராடு.
யம் பட உரை.
ம் பட வீடெடேல்.
க்கம் அறிந்து இணங்கு.
ந்தை தாய்ப் பேண்.
ன்றி மறவேல்.
ருவத்தே பயிர்செய்.
ண்பறித்து உண்ணேல்.
ல்பு அலாதன செயேல்.
மாட்டேல்.
வம் பஞ்சில் துயில்.
ஞ்சகம் பேசேல்.
கலாதன செயேல்.
மையில் கல்.
னை மறவேல்.
ந்தல் ஆடேல்.

டிவது மற.
காப்பது விரதம்.
கிழமைப்பட வாழ்.
கீழ்மை அகற்று.
குணமது கைவிடேல்.
கூடிப் பிரியேல்.
கெடுப்பது ஒழி.
கேள்வி முயல்.
கைவினை கரவேல்.
கொள்ளை விரும்பேல்.
கோதாட்டு ஒழி.
கௌவை அகற்று.

க்கர நெறி நில்.
சான்றோரினத்து இரு.
சித்திரம் பேசேல்.
சீர்மை மறவேல்.
சுளிக்கக் சொல்லேல்.
சூது விரும்பேல்.
செய்வனத் திருந்தச் செய்.
சேரிடம் அறிந்து சேர்.
சையெனத் திரியேல்.
சொற் சோர்வு படேல்.
சோம்பித் திரியேல்.

க்கோன் எனத்திரி.
தானமது விரும்பு.
திருமாலுக்கு அடிமைசெய்.
தீவினை அகற்று.
துன்பத்திற்கு இடங்கொடேல்.
தூக்கி வினைசெய்.
தெய்வம் இகழேல்.
தேசத்தோடு ஒத்துவாழ்.
தையல் சொல் கேளேல்.
தொன்மை மறவேல்.
தோற்பன தொடரேல்.

ன்மை கடைப்பிடி.
நாடு ஒப்பன செய்.
நிலையில் பிரியேல்.
நீர் விளையாடேல்.
நுண்மை நுகரேல்.
நூல்பல கல்.
நெற்பயிர் விளை.
நேர்பட ஒழுகு.
நைவினை நணுகேல்.
நொய்ய உரையேல்.
நோய்க்கு இடங்கொடேல்.

ழிப்பன பகரேல்.
பாம்பொடு பழகேல்.
பிழைபடச் சொல்லேல்.
பீடு பெற நில்.
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
பூமி திருத்தியுண்.
பெரியோரைத் துணைகொள்.
பேதமை அகற்று.
பையலோடு இணங்கேல்.
பொருள்தனைப் போற்றி வாழ்.
போர்த்தொழில் புரியேல்.

னம் தடுமாறேல்.
மாற்றானுக்கு இடம்கொடேல்.
மிகைப்படச் சொல்லேல்.
மீதூண் விரும்பேல்.
முனை முகத்து நில்லேல்.
மூர்க்கரோடு இணங்கேல்.
மெல்லி நல்லாள்தோள் சேர்.
மேன்மக்கள் சொற்கேள்.
மைவிழியார் மனையகல்.
மொழிவது அறமொழி.
மோகத்தை முனி.

ல்லமை பேசேல்.
வாது முற்கூறேல்.
வித்தை விரும்பு.
வீடு பெற நில்.
வுத்தமானாய் இரு.
வூருடன் கூடி வாழ்.
வெட்டென பேசேல்.
வேண்டி வினை செயேல்.
வைகறைத் துயிலெழு.
வொன்னாரைத் தேறேல்.
வோரஞ்சொல்லேல்.

ஔவையார் (12ம் நூற்றாண்டு)

8 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதில் சிலதுக்குப் பொருள் அறிய ஆவல்
1-இயல்வது கரவேல்
2- சித்திரம் பேசேல்
3- சையெனத் திரியேல்
பாம்போடு பழகேல்- என பொதுவாகக் கூறுகிறார். எல்லாப்பாம்பும் கொடியன வல்ல. பாம்பைவிடக் கொடிய மனிதர் பலர்.
தையல் சொல் கேளேல்- இவர் பெண்ணாக இருந்து இப்படிக் கூறியுள்ளாரே!
இவர் சொல்வதைக் கேட்கக் கூடாதா?
அல்லது மனவி சொல்லா?
தோற்பன தொடரேல்- என்கிறாரே...
பலர் தொடர், தோல்வியிலேயே வெற்றி கண்டுள்ளார்கள்.

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அவ்வையின் ஆத்திச் சூடியை
முழுமையாகப் படிக்க வெகு நாளாக ஆசைப்பட்டேன்
முழுமையாகப் பதிவிட்டமைக்கு நன்றி
இறுதியாக நூற்றாண்டை குறிப்பிட்டிருந்ததை
மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி...

Easy (EZ) Editorial Calendar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக மிக அருமை......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ யோகன் பாரிஸ்

இயல்வது கரவேல்:
இயல்வது - இயன்றது
கரவேல் - மறைக்காதீர்கள்
தங்களால் இயன்றதை ஒளித்து வைக்காமல் பிறருக்குக் கொடுங்கள்.

சித்திரம் பேசேல்:
சித்திரம் - பொய்யை மெய் போல் சித்தரித்துக் கூறுவது.
பொய்யை உண்மையைப் போல் பேசாதீர்கள்.

சையெனத் திரியேல்:
பார்ப்பவர்கள் “சை”(சீ) என அருவருக்கும்படி திரியாதே.

பாம்போடு பழகேல்:
பாம்பு போல் கொடிய விஷம் கொண்டவர்களுடன் பழகாதே.

தையல் சொல் கேளேல்:
மனைவி மேல் மயக்கம் கொண்டு அவள் சொல்வதை எல்லாம் கேட்டு ஆராயாமல் நடவாதே.

தோற்பன தொடரேல்:
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் முடியும் எனத் தெரிந்தே அச்செயலைச் செய்வதைத் தொடராதே :-)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Ramani S.
மிக்க நன்றி :-)

@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி!

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தமிழ் வாழ்க!!!!!!!

cheena (சீனா) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்பின் சுபதரா - அவ்வை அருளிச் செய்டஹ் ஆத்திச்சூடியினை பகிர்ந்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா